படிமுறைத்தமிழ் ஒன்றியம்
தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு – கனடா
28, 29 யூன் (June) 2025
கனடாவிற் தமிழ்க்கல்வியை மேலும் வளர்க்கும் நோக்கோடு ‘தேவையும் தீர்வும்’ என்னும் கருப்பொருளோடு மலரவிருக்கின்றது.
இம்மாநாட்டில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பெற்றோர்கள், தமிழ்க்கல்வியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
Click here to Submit Your Essay
மாநாட்டு நோக்கங்கள்
- ஆசிரியர்களிடையே ஒன்றிணைந்த கற்றல் கற்பிதலை உருவாக்கலும், அவர்களின்
கற்பித்தற்றிறனை மேம்படுத்தலும்.. - தமிழ் கற்றல் கற்பித்தலின் புதிய அணுகுமுறைகளையும், சிந்தனைகளையும்
ஆராய்தல். - தமிழ்மொழி கற்றலின் முக்கியத்துவத்தை உணர்த்தலும், அது கைவரப்பெற
மேற்கொள்ள வேண்டிய வழிவகைகளைக் காணுதலும். - ஆசிரியர்கள், கல்வியாளர்களுக்கிடையே தொடர்பையும் ஒத்துழைப்பு
ஏற்படுத்தல், வளர்த்தல் - தமிழ்மொழியைக் கற்பிக்கும், கற்கவிரும்பும் நிறுவனங்களை வினைப்பயன்
மிக்கனவாக மேம்படுத்தல்.
ஆய்வுக் கட்டுரைகள்
மாநாட்டுக் கருப்பொருளையொட்டியே கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். அவை மாநாட்டு நோக்கங்களுக்கு வழிகாட்டி நின்றால் நன்று. பேராளர்கள் பின்வரும் தலைப்புக்களைக் கவனத்திற்கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை எழுதலாம்.
முழுவடிவக் கட்டுரை 14 மார்ச் 2025 க்கு முன்னதாக ஏற்பாட்டாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கட்டுரைகள்
* ஆய்வுக்கட்டுரைகள், தரவுகளின் அடிப்படையில் அமைந்த ஆய்வுகளாகவோ, வகுப்பறை ஆய்வுகளாகவோ அமைதல் நன்று.
* ஆய்வுகளின் முடிவில் கற்றல் கற்பித்தலுக்குத் துணைபுரியும் பரிந்துரைகள் கூறப்படல் வேண்டும்.
* பணிபுரியும் பள்ளியில் மாணவர்களிடையே ஆய்வு அல்லது பயிற்சி மேற்கொண்டு, அதைக்காணொளியாகக் கட்டுரையை முன்வைக்கும்போது பயன்படுத்தலாம்.
* கட்டுரைகள், கற்பித்தலின்போது எதிர்நோக்கும் சவால்களையும் சிக்கல்களையும் களைய வழிகாட்ட வேண்டும்.
* கட்டுரைகள் செய்முறையை அடிப்படையாகக் கொண்டும் அமையலாம்.
கட்டுரைத் தலைப்புகள்
- வளர்நிலை 1 மாணவர்களிடையே பேச்சுத்தமிழை வளர்த்தல்.
- வளர்நிலை 2 மாணவர்களிடையே பேச்சுத்தமிழை வளர்த்தல்.
- வளர்நிலை 1, 2, 3 மாணவர்களுக்கான கதை சொல்லல்.
- வளர்நிலை 4 – மாணவர்களின் வகுப்பை எவ்வாறு ஆரம்பிப்பது.
- பண்புடன்கூடிய உரையாடலுக்கான கற்பித்தல் முறை.
- திறப்பசை, மூடசை என்பவற்றைக்கொண்டு சொல்லாக்கல்.
- வல்லின மெல்லின ஒலிகளின் தோற்றமும் இயல்புகளும்.
- மயங்கும் மயங்கா ஒலிகளைக் கண்டறிதல்.
- ஒருமை பன்மை விதிகளை ஒருங்குசேரப் பார்த்தல்.
- வேற்றுமை உருபுகளைக் கற்பித்தல்
- பயனிலை வினைச் சொற்களும் திணை, பால், எண், இடமும்.
- வாசித்தலை மேம்படுத்துவதற்கான கற்பித்தல் முறைகள்.
- தமிழர் வாழ்வியலை உள்ளடக்கிய கற்பித்தல் முறை.
- தமிழ்மொழி கற்றல் கற்பித்தலை வளப்படுத்த உதவும்
முனைப்புகள். - சிறுகதைகள் எழுதுவதற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
- மாணவர்களுக்குக் கவிதை எழுதப் பயிற்சி அளித்தல்.
- தமிழ்மொழி கற்பித்தலில் தொல்காப்பியத்தின் பங்கு.
- மொழியும் பண்பாடும்.
- பிழையான தமிழ் உச்சரிப்புக்கான காரணங்களும் தீர்வும்.
- புணர்ச்சியில் ஓரசைச் சொற்களின் இயல்புகள்.
- இசையுடன் பயணித்து மாணவர்களிடையே மொழிஅறிவை
வளர்த்தல். - நடனத்துடன் பயணித்து மாணவர்களிடையே மொழிஅறிவை வளர்த்தல்.
- சித்திரக்கதை வடிவில் வாசித்தலை மேம்படுத்தல்.
- சொல்லாக்கும் வழிகளும் மாணவர் விரும்பிக் கற்றலும்.
- அசைகளின் வழி தமிழ்ச்சொற்களை ஆக்கலும் கற்பித்தலும் பயனும்.
- குற்றியலுகரம்
- வல்லின மெல்லின எழுத்துகளின் தோற்றமும் இயல்புகளும்.
- இடையின எழுத்துகளின் தோற்றமும் இயல்புகளும்.
- தமிழ்மொழி கற்றலில் புலம் பெயர் நாடுகளில் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்.
- படிமுறைத்தமிழ்ப் பாடத்திட்டம்
- மயங்கும் மயங்கா ஒலிகள்
- வல்லின ஒலிகளின் தோற்றமும் இயல்பும்
- மரபுத்தொடர், பழமொழி மூலம் வாழ்வியலைக் கற்பித்தல்
- ஒற்றுமிகுதலும் மிகாமையும்.
- பயன் நிறைந்த முறையில் வேற்றுமை உருபுகளைக் கற்பித்தல்.
- தமிழ்ப்புணர்ச்சி வகைகள்
- புணர்த்தி எழுத வேண்டியதன் தேவைகள்
- திரிபுப்புணர்ச்சி விளக்கமும் எடுத்துக்காட்டும்
- ஒலிவகைப்புணர்ச்சி
- பொருள் சார்ந்த புணர்ச்சி
- படிமுறைத் தமிழ் கற்பித்தல் முறையின் சிறப்புகள்
- குற்றியலுகரச் சொற்களின் இயல்புகள்.
- இவை தவிர நீங்கள் விரும்பும் ஓர் புதிய தலையங்கத்தைத் தெரிவு செய்து எழுதலாம்.