Padimurai Tamil Gala 2026 – A Fundraising Event

படிமுறைத் தமிழ் ஒன்றியம்!

தமிழ் இனத்துக்காக படிமுறைத் தமிழ் ஒன்றியம் என்ன செய்கிறது, என்ன செய்ய நினைக்கிறது என்பதைப் பற்றிய ஒரு சிறிய விளக்கம்!

தமிழ் இனம் உலகெங்கும் இன்று மிகப் பெரிய சவாலைச் சந்தித்திருக்கிறது. தமிழ் மக்கள் உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த நிலையில், தமிழ் மொழியையும் எமது கலாச்சாரங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் என அனைத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடமை எமக்கு முன்னால் மலையென வியாபித்திருக்கிறது.

தமிழினத்துக்கான இந்தத் தார்மீகக் கடமையைப் புரிந்து கொண்டதுடன், அதற்காக சித்தம் அழகியான் திரு சுப்பிரமணியம் இராசரத்தினம் அவர்களினால், தொல்காப்பியத்தின் வழியில் தமிழ் மொழியை அதன் தோற்றத்தின் அடிப்படையில் தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தலை மீளுருவாக்கி, கனடாவில் டொரோன்டோ, மொன்றியல் மற்றும் அல்பேட்டா மாகாணங்களுடன், அவுஸ்திரேலியாவில், மெல்போர்ன், பேர்த், பிறிஸ்பேர்ன், அடிலைட் மாகாணங்களுக்கும் தமிழ் கற்பித்தலை விரிவுபடுத்தியதுடன், வருடவருடம் அங்கே இருக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளையும் நடத்துகிறது.

அடுத்து பிஜீ, தென்னாபிரிக்கா, மலேசியா, பர்மா, மொறீசியஸ் போன்ற நாடுகளில் தாங்கள் தமிழர்கள் என்கிற உண்மையை மறந்து வாழும் தமிழர்களிடம் அவர்களது தாய் மொழியை மீட்டுக் கொடுத்து, உலக நாடுகளில் இருக்கும் தாய்த் தமிழ் உறவுகளை, தமிழ் மொழியால் இணைத்துத் தமிழராய் எழுவதற்காக, கற்பித்தல் முறையை உருவாக்கியதோடு, தன்னார்வலர்களாகத் தன்னுடன் இணைந்த அனைவரையும் இணைத்து, பெரும்பாலான உலக நாடுகளில் தங்களது அடையாளங்களை இழந்து வாழும் தமிழர்களை இணைக்கும் முயற்சியில், படிமுறைத் தமிழ் ஒன்றியம் தமிழ் மொழிக் கற்பித்தல், அடுத்த தலைமுறை ஆசிரியர்களை உருவாக்கும் முயற்சியுடன், அந்தந்த நாட்டு மக்களுக்கான இலவச கல்விச் சேவையாக, பாடப்புத்தகங்கள் முதல் வகுப்புகள் வரை இலவசமாக செய்துவருகிறது.

கற்பித்தல், புத்தகங்கள், ஆசிரியர் பயிற்சிப் பட்டறைகளை பிஜீ, தென்னாபிரிக்கா, மொறீசியஸ் ஆகிய நாடுகளில் அடையளம் இழந்த தமிழ் மக்களை மீள் கட்டமைக்கும் முயற்சியை, அதாவது ஒரு அரசினால் எடுத்துச் செய்யப்பட வேண்டிய இலவச கல்வியைக் கொடுத்து, தமிழ் தேசியத்தை வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாமல், உணர்வுடன் உண்மையாக இத்தனையையும் செய்ய நினைக்கும் படிமுறைத் தமிழ் ஒன்றியத்தின் செயற் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றால், உங்களுடைய ஆதரவு மிகவும் அவசியமாகிறது.

“தமிழால் இணைவோம் தமிழராய் உயர்வோம்” என்கிற நோக்கத்துடன் நம்மாலானதைச் செய்வோம்!

Greetings to all,

Padimurai Tamil Gala 2026 will take place on May 31, 2026, and ticket sales are now officially open.

We kindly request everyone to support this important initiative by purchasing tickets and helping us promote ticket sales among your family, friends, and community.

This is the first fundraising event organized by Padimurai Tamil Federation, and it plays a vital role in our mission to expand our teaching methods across the world. We have been providing FREE teacher training to educators globally, and through our efforts, we have also been able to offer FREE Tamil textbooks to many students in other countries who are unable to afford them. The number of students eager to learn Tamil continues to grow, and your support is essential for us to serve them effectively.

If you or anyone you know—whether individuals, business owners, or well-wishers—would be willing to sponsor this event, it would be greatly appreciated. We have attached our sponsorship packages for your review.

Your contribution—big or small—will directly help us preserve the Tamil language and culture for future generations. Together, let us uplift our community and strengthen the global reach of Tamil education.

Thank you for your continued support.

Padimurai Tamil Federation
416-869-8252 | 416-821-5773
[email protected]